கொரோனா காரணத்தினால் 2021ஆம் ஆண்டு ஜூன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் - கூகுள் நிறுவனம் அனுமதி.!

கொரோனா காரணத்தினால் 2021ஆம் ஆண்டு ஜூன் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் - கூகுள் நிறுவனம் அனுமதி.!

Update: 2020-07-28 12:57 GMT

இந்த கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் இருக்கும் ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணத்தினால் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என கூகுள் நிறுவனம் அனுமதி கொடுத்துள்ளது.


இதனைப்பற்றி கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய இமெயிலில்: நமது ஊழியர்கள் தங்களுடைய எதிர்கால செயல்பாடுகளை திட்டமிட்டுவதற்காக, வீட்டிலிருந்தே வேலை வேலை பார்ப்பதற்கு அனுமதி நீடிக்கப்படுகிறது. இதனால் அலுவலகம் வந்து வேலை பார்க்கும் அவசியமில்லாத பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்கள் 2021 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகம் அளவில் உள்ள இரண்டு லட்சம் கூகுள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயன் அடைவார்கள் என தெரிவித்துள்ளது. 

Similar News