2023 - 24 நிதியாண்டில் மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 5 லட்சம் கோடி வழங்கி சாதனை!

Update: 2024-04-10 11:32 GMT

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24 ஆம் நிதி ஆண்டில் முத்ரா கடன்கள் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் கோடி வழங்கப்பட்டு  சாதனை வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது :-

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2023- 24 ஆம் நிதி ஆண்டில் சிறு வணிகங்களுக்கு ரூபாய் 5.28 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் ரூபாய் 4.40 லட்சம் கோடியாக இருந்தது. இந்த கடன்களுக்கான பயனாளிகளில் 70% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கடன் திட்டம் 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த நிதியாண்டுக்கான தற்காலிக புள்ளி விவரங்களையும் சேர்த்தால் இதுவரை இதுவரை 46 லட்சம் கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது என முத்ரா திட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முத்ரா கடன்களில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்கள் சிஷு என்ற பிரிவிலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் கிஷோர் என்ற பிரிவிலும், 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தருண் என்ற பிரிவிலும் வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் கார்ப்பரேட் அல்லாத விவசாயமில்லாத சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி துவங்கப்பட்டது.


SOURCE :Kaalaimani.com

Similar News