2025 ஆம் ஆண்டுக்குள் விமானத்துறை, பாதுகாப்பு பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் ரூ.1,75,000 கோடி அளவை எட்ட இலக்கு!

2025 ஆம் ஆண்டுக்குள் விமானத்துறை, பாதுகாப்பு பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில் ரூ.1,75,000 கோடி அளவை எட்ட இலக்கு!

Update: 2020-08-04 14:45 GMT

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், தற்சார்பு இந்தியா தொகுப்பில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பாதுகாப்பு மற்றும் விமானத்துறையில், உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவை இடம் பெறச் செய்ய, பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2020-இன் வரைவை வகுத்துள்ளது.

பின்வரும் இலக்குகள் மற்றும் நோக்கங்களுடன் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது;

1. 2025-ஆம் ஆண்டுக்குள் விமானத்துறை, பாதுகாப்பு பொருள்கள் மற்றும் சேவைப் பிரிவில், ரூ.35,000 கோடி ( 5 பில்லியன் அமெரிக்க டாலர்) ஏற்றுமதி உள்பட ரூ.1,75,000 கோடி ( 25 பில்லியன் அமெரிக்க டாலர்) விற்றுமுதல் இலக்கை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

2. ஆயுதப் படையினரின் தேவையை தரமான பொருள்களுடன் ஈடுகட்டும் வகையில், விமானத் தொழில், கப்பல் கட்டும் தொழில் உள்பட, மாறும் தன்மையுடைய, வலுவான, போட்டித்திறன் கொண்ட பாதுகாப்புத் தொழிலை உருவாக்குதல்.

3. உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டின் மூலம் "மேக் இன் இந்தியா'' முன்முயற்சிகளை மேற்கொள்வதன் வாயிலாக, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.

4. பாதுகாப்பு உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியை மேம்படுத்தி, உலகப் பாதுகாப்பு மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறுதல்.

5. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதி வழங்குதல், இந்திய ஐபி உரிமையை உருவாக்குதல், வலுவான, தற்சார்புப் பாதுகாப்பு தொழிலை மேம்படுத்துதலுக்கான சுற்றுச்சூழலை உருவாக்குதல் போன்ற வரைவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Similar News