டிச.22-ம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த போகும் அமைச்சர்கள்!!
By : G Pradeep
Update: 2025-12-19 16:51 GMT
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் டிச.22-ம் தேதியன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதில் பொதுப்பணி, நிதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடக்கும்.
பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி அரசுக்கு பெரும் பலம் என்பதால் அவர்களை திருப்திப்படுத்தும் முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.