"மேக் இன் இந்தியா" திட்டத்திற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது!

"மேக் இன் இந்தியா" திட்டத்திற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது!

Update: 2019-08-05 01:56 GMT

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு உள்நாட்டிலேயே பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பது, முக்கிய நோக்கங்களில் ஒன்று. சமீபகாலமாக, அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும், இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கே தரப்படுகின்றன.


அரசு ஒப்பந்தத்தை வாங்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும், டி.பி.ஐ.ஐ.டி., அமைப்பு, தன் விதிமுறைகளில், பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.


இதற்கு முன் சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது அல்லது மாற்றங்களை செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இனி அரசு ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்கள், தங்கள் திட்டப் பணிகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும், உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என தெரிகிறது.


மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அதை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


Similar News