தல அஜித்தின் 28 வருட திரையுலகத்தை குறித்து வனிதா விடுவித்த ட்விட்டர் பதிவு - மறுபடியும் சர்ச்சை ?

தல அஜித்தின் 28 வருட திரையுலகத்தை குறித்து வனிதா விடுவித்த ட்விட்டர் பதிவு - மறுபடியும் சர்ச்சை ?

Update: 2020-07-27 10:15 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவன் 90's படங்களில் இருந்து அதிகமாக படங்கள் நடித்து தற்போது வரை வெற்றி வாகை சூடியவர். தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தனக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது போனிகபூர் தயாரிக்க வலிமை என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க எச் வினோத் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தல அஜித் தமிழ் சினிமாவில் நுழைந்து 28 வருடங்கள் ஆகி விட்டன. இந்த 28 வருடங்களை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றனர் அதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அந்த பதிவில் நானும் நீங்களும் ஒன்றாகத்தான் திரைத்துறையில் நுழைந்தோம் என்றும் இது நம்ப முடியாத ஒன்றுதான் என்று இவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இவர் உங்கள் வெற்றிக்கு நீங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்றும்,நான் இதுவரை சந்தித்த மிக உண்மையான, தாழ்மையான மனிதர் என்று வாழ்த்துகிறார். மேலும் ஷாலினியையும் ஆசீர்வதிப்பாராக இவர் கூறுகிறார். வனிதாவின் இந்த பதிவிற்கு பலரும் தன் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அந்த கமெண்ட்யை பார்த்து நீங்கள் அஜித் ரசிகரா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

Similar News