3 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்.. தமிழக மக்களுக்கு வழங்கிய மத்திய இணை அமைச்சர்..

Update: 2023-12-18 01:54 GMT

கன்னியாகுமரியில் நடைபெற்ற யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் பங்கேற்று 3 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உவிகளை வழங்கினார். மத்திய அரசுத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் முக்கிய நோக்கம் என மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார். நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.


இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் ஓக்கூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமையில் கலந்துகொண்டு 1.8 கோடி மதிப்புள்ள பல்வேறு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. பின்னர் பிரதமரின் காணொலி உரை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங், பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என்றார்.


இதுபோன்ற திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார். இத்திட்டங்கள் மக்களை எந்த அளவு சென்றடைந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளவும் அவற்றின் பலன்களை முழுமையாக மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த யாத்திரை நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று மக்களைச் சந்திப்பதாக ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News