காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே 370 சட்டப்பிரிவு ரத்து : ஸ்ரீநகரில் தேசியக் கோடி ஏற்றி வைத்து கவர்னர் சத்யபால் சுதந்திர தின உரை

காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே 370 சட்டப்பிரிவு ரத்து : ஸ்ரீநகரில் தேசியக் கோடி ஏற்றி வைத்து கவர்னர் சத்யபால் சுதந்திர தின உரை

Update: 2019-08-15 10:28 GMT

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக்,மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.


பின்னர் உரையாற்றிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் வெறும் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல. 370 சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை என்பதை மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். அதே சமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு விதமான பிராந்தியங்களின் அடையாளங்கள் வளர வழிவகுக்கிறது என்றார்.


முன்னதாக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். மக்கள் உற்சாகமாக தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி இந்த சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டனர்.

Similar News