விருத்தாசலத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று - அதிர்ச்சியில் விருத்தாசலம்.!

விருத்தாசலத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று - அதிர்ச்சியில் விருத்தாசலம்.!

Update: 2020-04-10 04:29 GMT

விருத்தாசலத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது.

இந்த 13 பேரும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார்கள்.

அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர். அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் நேற்று வெளி வந்தது.

அதில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் தங்கை மகள் விருத்தாசலத்தைச் சேர்ந்த 4 வயது பெண்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 பேரின் சோதனை முடிவுகள் வெளியானதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென பரிசோதனை முடிவு தெரிய வந்தது.

இதனையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் மார்ச் 20 ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரையில் 177 நபர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில், 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 104 பேரின் சோதனை முடிவுகள் வர வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், 51 பேர் கடலூர், சிதம்பரம் மருத்துவக்கல்லூரி, சிதம்பரம் அரசு மருத்துவமனைகளிலும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

Similar News