அயோத்தியில் ராமர் கோவில்: 40 கிலோ வெள்ளி செங்கலை கொண்டு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி.!

அயோத்தியில் ராமர் கோவில்: 40 கிலோ வெள்ளி செங்கலை கொண்டு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி.!

Update: 2020-08-05 07:20 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி நாட்டுகிறார். இந்த விழாவுக்கு 175 பேரை அழைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய பிரதமர் மோடி லக்னோவுக்கு வந்த பின்பு ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்தடைந்தார். இதன் பின்பு அயோத்தியில் உள்ள அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனை வழிபாடு செய்தார். ராமனின் காவலரான அனுமனுக்கு ஆர்த்தி காட்டி வழிபாடு செய்தார்.

பின்பு ராம ஜென்ம பூமிக்கு சென்று குழந்தை ராமருக்கு பூஜை செய்தார் மற்றும் ராம ஜென்ம பூமியில் பாரிஜாத மரக்கன்றை நட்டு வைத்தார் பிரதமர் மோடி. 


தற்போது ராமர் பூமி கோவிலின் பூஜை விழா துவங்கப்பட்டு, அதில் தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது.


இந்நிலையில் 40 கிலோ எடையான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி நாட்டி வைத்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் மோடியால் நடப்பட்டது.  360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம் ராமர் கோயில் வடிவம் கட்டப்படவுள்ளது. 

Similar News