"மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நம் நாட்டிலேயே ஸ்மார்ட் போன் தயாரிக்க ரூபாய் 42,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.....!!!!

"மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நம் நாட்டிலேயே ஸ்மார்ட் போன் தயாரிக்க ரூபாய் 42,000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.....!!!!

Update: 2020-07-25 05:58 GMT

உலக நாடுகளில் தற்போதைய மிக அவசியத் தேவையாக ஸ்மார்ட்போன் மாறிவருகிறது.செல்போன் உற்பத்தியில் முதலிடம் இருப்பது சீனா.

தற்போது கொரான வைரஸ் காரணமாக பல நாடுகள் சீனாவை புறந்தள்ளி வருகிறது. ஆகவே நம் நாட்டில் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் அதி நவீன செல்போன் தயாரிக்க ஊக்கம் அளிப்பதற்காக ரூபாய் 42 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை சாதகமாக்கி மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நம் நாட்டில் ஸ்மார்ட்போன் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர இந்தியா இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதன்படி 200 டாலருக்கு மேல் விலை கொண்ட அதிநவீன ஸ்மார்ட் போன் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். மேட் இன் இந்தியா திட்டத்தில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க ஆப்பிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் ஒப்பந்தங்கள் மூலம் ஸ்மார்ட்போனை தயாரித்து வரும் பஸ்கான், விஸ்ட்ரன் கம்பெனிகள் பயன்பெறும்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, தொலைத்தொடர்பு துறை, தொழில் மற்றும் வர்த்தகத் துறை, உட்பட 5 மத்திய அரசுத் துறைகள் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு ஊக்கமளிக்கும் ரூபாய் 42,000 கோடி திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News