50, 655 கோடியில் 8 அதிவிரைவுச் சாலை திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எட்டு அதிவிரைவுச் சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.;

Update: 2024-08-03 17:45 GMT

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூபாய் 50 ,655 கோடி மதிப்பிலான 8 தேசிய அதிவிரைவுச் சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆக்ரா-குவாலியர் 6 வழிச்சாலை,  கரக்பூர் -மோரே கிராமம் 4 வழிச் சாலை, தாராட்- தீக்சனா- அகமதாபாத் ஆறு வழிச்சாலை, அயோத்தி நான்கு வழிச்சாலை, ராய்ப்பூர் நான்குவழி தேசிய அதிவிரைவுச் சாலையின் பாதல்கான் - கும்லா இடையிலான வழித்தடம் , கான்பூர் ஆறு வழி வட்டச் சாலை நான்கு வழி வடக்கு கௌஹாத்தி புறவழிச்சாலை நாசிக் படா - கேதா (மகாராஷ்டிரம்) எட்டு வழி உயர் மட்ட வழித்தடம் ஆகிய எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மொத்தம் 936 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திட்டங்களால் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான இணைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது . எட்டு அதிவிரைவு சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி "இந்தியாவில் உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் நமது பொருளாதார வளர்ச்சியில் பன்முக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வேலைவாய்ப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் " என்று குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :News

Tags:    

Similar News