இந்த 52 சீன அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் - புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை - பட்டியல் உள்ளே.! #ChinaApps

இந்த 52 சீன அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் - புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை - பட்டியல் உள்ளே.! #ChinaApps

Update: 2020-06-18 02:22 GMT

இந்திய புலனாய்வு அமைப்புகள் சீனாவை சேர்ந்த 52 மொபைல் அப்ளிகேஷன்களை சுட்டிக்காட்டியுள்ளன. அவற்றைத் தடை செய்யவோ அல்லது மக்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆலோசனை வழங்கும்படியோ அரசாங்கத்திடம் கோரியுள்ளன என இந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளுக்கு வட்டாரங்கள் தெரிவிப்பதாக வெளியிட்டுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் இயங்குதளமான ஜூம், மற்றும் டிக்டோக், ஷேரீட், யுசி பிரௌசர் மற்றும் வீ சாட் போன்ற பிரபலமான பயன்பாடுகள் பட்டியலில் உள்ளன.

இந்த அபப்ளிகேஷன்கள் பயன்படுத்த பாதுகாப்பாக இல்லை என்றும் முக்கியமான தரவுகளை இந்தியாவுக்கு வெளியே பரிமாற்றம் செய்யலாம் என்றும் ஏஜென்சிகள் தெரிவித்தன. இந்த பரிந்துரைகள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தால் ஆதரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆப்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், "பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன", என ஒரு அதிகாரி அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார். ஒவ்வொரு பயன்பாடும் ஒவ்வொரு மாதிரி வரிசைப்படுத்தப்படும் என்றார்.

புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ள பயன்பாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: -

  1. TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo
  2. WeChat, SHAREit, UC News, UC Browser
  3. BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE
  4. Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder
  5. APUS Browser, VivaVideo- QU Video Inc
  6. Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab)
  7. Mi Community, DU recorder, YouCam Makeup
  8. Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser
  9. DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah
  10. CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map
  11. Wonder Camera, ES File Explorer, QQ International
  12. QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music
  13. QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings
  14. Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space


Cover Image Courtesy: Gadgets to use



Similar News