5G ஏலத்தை ஆரம்பித்த மத்திய அரசு, ₹5.63 லட்ச கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு!

5G ஏலத்தை ஆரம்பித்த மத்திய அரசு, ₹5.63 லட்ச கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு!

Update: 2019-09-22 14:31 GMT

கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பொரேட் வரியை 30% சதவீதமாக இருந்து 22% மாக குறைத்தார். இந்த அறிவிப்பால் மத்திய அரசிற்கு ₹1.45 லட்ச கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தார். இந்த அதிரடி வட்டி குறைப்பால் பல வெளிநாட்டு முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலையில், ₹1.45 லட்ச கோடி எங்கிருந்து வரும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதற்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப செயலாளர் அன்ஷு பிரகாஷ் கூறுகையில், இந்த வருட டிசம்பர் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் அரசு 5G அலைக்கற்று ஏலம் விடப்படும் அதற்கான பணிகளை அரசு ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்தார். 5G அலைக்கற்று ஏலத்தால் அரசிற்கு ₹5.63 லட்சம் கோடி வருமானம் வர வாய்ப்பு இருக்கிறதாக கருதப்படுகிறது என்றார். அரசு 2016-17-ஆம் ஆண்டு ₹65,789 ஏலத்தில் எடுக்கப்பட்டது. 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டு ஏலம் விடப்படவில்லை. தற்போது ஏலத்திற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 
அரசின் நேரடி வரி வசூல் ₹13.35 லட்ச கோடியாக இருக்கும், இதில் ₹1.45 லட்ச கோடி இழப்பு ஏற்படும். கார்பொரேட் வரி குறைப்பால் ஏற்படும் இழப்பை 5G ஏலம் மூலம் சரி செய்ய முடியும்.


Similar News