60 வயதிற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.8000 நிதி உதவி:மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று மக்களவையில் நாடு முழுவதும் தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்கள் பணியாளர்களின் நலனுக்காக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இதன் மூலம் கைத்தறி நெசவாளர்கள் மாதம் ரூபாய் 8000 பெற உள்ளனர்
அதாவது ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட அறுபது வயதிற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் தோறும் 8000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் மேலும் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிதி உதவியுடன் கூடிய ஜவுளித்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்