பதவியேற்ற சில மணி நேரங்களில் களத்தில் இறங்கினார் பிரதமர் மோடி - அடுத்த 100 நாட்களில் 'சூப்பர்' சீர்திருத்தங்கள் : அதிரடி திட்டங்கள்.!

பதவியேற்ற சில மணி நேரங்களில் களத்தில் இறங்கினார் பிரதமர் மோடி - அடுத்த 100 நாட்களில் 'சூப்பர்' சீர்திருத்தங்கள் : அதிரடி திட்டங்கள்.!

Update: 2019-06-01 04:22 GMT

ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது


மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் 58 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், நாடாளுமன்ற கூட்டத் தொடர், மத்திய பட்ஜெட் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


வரும் 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏழை விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.


இதேபோல், வீரமரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளில் ஆண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், பெண் குழந்தைகளுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து ஆண்டுக்கு 500 பேருக்கு வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு வியாபாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது


Similar News