வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இந்திய பயணிகளுக்கு அவர்களின் சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமை - மத்திய அரசு அறிவிப்பு.!

வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இந்திய பயணிகளுக்கு அவர்களின் சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமை - மத்திய அரசு அறிவிப்பு.!

Update: 2020-07-26 07:16 GMT

மத்திய அரசின் புதிய திட்டம் மூலம் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் சொந்த செலவில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. எனவே அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தனிப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விமானங்களை இயக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. அதன்படி பிரான்சில் இருந்து கடந்த 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை 28 விமானங்களை இயக்கப்படுகின்றன. இதைப்போல அமெரிக்காவின் யூனிடெக் விமான நிறுவனம் 18 விமானங்களை வருகிற 31-ஆம் தேதி வரை இந்திய நகரங்களுக்கு இயக்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் இந்தியா வரும் பயணிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாக்கு ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரம் விமான போக்குவரத்து குடியேற்றத்துறை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இது கட்ட உடல் நல பரிசோதனை செய்வது மற்றும் அவர்கள் நகரத்திலேயே சொந்த செலவில் ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களது வீடுகளில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

டெல்லியைப் பொறுத்தவரை கர்ப்பிணிகள் குடும்பத்தில் மரணம் தீவிர நோய்கள் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வருவோருக்கு மட்டுமே தனிமைப்படுத்துதல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Similar News