தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.! #Rainalert #whether #tnrain

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.! #Rainalert #whether #tnrain

Update: 2020-06-25 03:55 GMT

தமிழகத்தில் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்குசுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களாக மழை பெய்கிறது.

அந்த மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதாலும், தென் மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், தென் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (வியாழக்கிழமை) இடியுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும், சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்க ளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியுள்ளனர்

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத் தில் தமிழகத்தில், 'செய்யூர் 8 செ.மீ., அரக்கோணம், மதுராந்தகம், ஆம்பூர் தலா 5 செ.மீ., காவேரிப்பாக்கம் 4 செ.மீ., செஞ்சி, சோளிங்கர், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருப்பத்தூர் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Similar News