"அற்பமான அரசியல் ஆதாயங்களுக்காக இராணுவ பிரச்சினைகளைத் திரித்துக் கூறுவது இழிவானது" - 71 ஆயுதப்படை வீரர்கள் ராகுல் காந்திக்கு கண்டன அறிக்கை.! #RahulGandhi #IndiaChina

"அற்பமான அரசியல் ஆதாயங்களுக்காக இராணுவ பிரச்சினைகளைத் திரித்துக் கூறுவது இழிவானது" - 71 ஆயுதப்படை வீரர்கள் ராகுல் காந்திக்கு கண்டன அறிக்கை.! #RahulGandhi #IndiaChina

Update: 2020-06-12 02:28 GMT

லடாக்கில் உள்ள இந்தியப் பகுதிகளை சீனா கைப்பற்றியது என ராகுல் காந்தி கூறியதை அடுத்து, 71 ஆயுதப்படை வீரர்கள் முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இப்போது சர்ச்சைக்குரிய இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"முதலில், உலகின் மிகவும் கடினமான மற்றும் நட்பற்ற நிலப்பரப்பில் நம் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத ஒரு நபரின் இத்தகைய விரும்பத்தகாத மற்றும் இழிவான ட்வீட் / கருத்துக்களை நாங்கள் கண்டிக்க விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கைக் கூறியது.

அதில், "ராகுல் காந்தி 1962 ஐ ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, அவருடைய தாத்தா ஸ்ரீ ஜவஹர்லால் நேரு தான் அப்போதைய பிரதமர். முற்றிலும் தயாராக இல்லாத நிலையில் நாங்கள் பிடிபட்டு சீனாவின் கைகளில் மிகவும் அவமானகரமான தோல்வியை சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் நம் வீரர்கள் வீரமாக போராடி சீனாவிற்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினர். "

2017ல் டோக்லாம் மோதல் பதற்றத்தின் போது சீன அதிகாரிகளுடனான ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய சந்திப்பைக் குறிப்பிட்ட வீரர்கள், ராகுல் காந்திக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

"இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அவை உண்மைகள் அல்ல என்பதும் தேசிய பாதுகாப்பிற்கு எதிரானவை என்பதும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது, அதனால் இது எங்கள் முக்கிய அக்கறை. ராகுல் காந்தி, டோக்லாமில் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் பதற்றத்தின் போது சீனத் தூதுவர்களுடன் பழகினார் என்பது அனைவருக்கும் தெரியும். . எந்தவொரு விவேகமான இந்தியனும் தனது சொந்த நாட்டிற்கும் இராணுவத்திற்கும் எதிராக அறிக்கைகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை, இது சந்தேகத்திற்கு இடமின்றி எதிரி நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது, "என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீரர்களில் AVM சஞ்சிப் போர்டோலோய், எஸ் எஸ் சக்சேனா, டிங்கர் அதீப் ஆகியோர் அடங்குவர். பாகிஸ்தான் குறித்த காங்கிரஸின் அறிக்கைகள் கடந்த காலங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வந்தன, இதனால் இந்த விஷயத்திலும் ஆபத்து உள்ளது என்று டிங்கர் அடீப் கூறுகிறார். "அற்பமான அரசியல் ஆதாயங்களுக்காக இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் திரித்துக் கூறுவது மிகவும் இழிவானது" என்று மேலும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, ராகுல் காந்தி ட்வீட் செய்ததாவது: "சீனர்கள் லடாக்கில் நம் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், பிரதமர் முற்றிலும் அமைதியாக இருக்கிறார், சம்பவ இடத்திலிருந்து மறைந்துவிட்டார்."

இதை "அற்பமான அரசியல்மயமாக்கல்" என்று அழைத்த வீரர்கள், "இந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட வீரர்கள் நாங்கள், இந்தத் துறையில் இருந்து பல நடவடிக்கைகளில் / செயல்களில் பங்கேற்றுள்ளோம், எனவே, நாங்கள் அனைவரும் ராகுல் காந்தியின் இத்தகைய கீழ்த்தரமான அரசியல் தாக்குதலால் அவமதிக்கப்பட்டதாகவும்,அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறோம்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மற்றும் லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவம் மோதலில் ஈடுபட்டுள்ளன, அங்கு சீன ராணுவம் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) ஒரு பெரிய இராணுவ கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 

Similar News