75% மக்களுக்கு 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இமாலய சாதனை படைத்த மோடி அரசு!
இந்தியாவில் கோவில் தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை செலுத்தப்பட்டுள்ளது குறித்து என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இன்று நிலவரப்படி காலை 8 மணிவரை நாடு முழுவதும் 165.70 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுளளது இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் கூறுகையில் தடுப்பூசி செலுத்திட தகுதிவாய்ந்த அவர்களில் 75 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர் இது முக்கியமான சாதனைக்காக நமது சக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.