வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன்!

இடைக்கால பட்ஜெட்டில் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க மாநிலங்களுக்கு 75 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-02 06:15 GMT

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வளர்ந்த இந்தியா கனவை நினைவாக்கும் திட்டங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அரசு வைத்துள்ளது .வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க மாநிலங்களில் வளர்ச்சியும் வளர்ச்சியை செயல்படுத்தும் சீர்திருத்தங்களும் தேவை. எனவே இதற்காக ரூபாய் 75,000 கோடி 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனாக இந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024 - 25ல் பட்ஜெட் மதிப்பீடுகள் மாநிலங்களின் பங்கு மானியங்கள் மற்றும் கடன்கள் மற்றும் மத்திய நிதி உதவி திட்டங்கள் உட்பட மாநிலங்களுக்கு மாற்றப்படும்.


மொத்த வளங்கள் ரூபாய்  22,22, 264 கோடியாக உள்ளது. இது 2022-23 நிதி ஆண்டின் உண்மையான தொகையை விட நான்கு லட்சத்து 13 ஆயிரத்து 848 கோடி அதிகமாகும் .அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி அணுகுமுறையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.இது அனைத்து சாதியினரையும் அனைத்து மட்டத்திலான மக்களையும் உள்ளடக்கியதாகும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில் நாம் அனைவரும் உழைத்து வருகிறோம். இந்த இலக்கு எட்டுவதற்கு மக்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட்டில் வளர்ந்த இந்தியாவுக்கான விரிவான செயல் திட்டத்தை எங்கள் அரசு வழங்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News