ரூ.8,800 கோடி மதிப்பிலான விழிஞ்சம் துறைமுகத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! இந்தியாவின் முதல் கொள்கலன் டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகம்!

Update: 2025-05-02 13:42 GMT

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இன்று மே 2 கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை திறந்து வைத்தார் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள துறைமுகம் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், ரூ.8,800 கோடி மதிப்பிலான விழிஞ்சம் துறைமுகத் திட்டம் நாட்டின் முதல் பிரத்யேக கொள்கலன் டிரான்ஷிப்மென்ட் துறைமுகம் என கூறப்பட்டுள்ளது


மேலும் இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி இந்த துறைமுகம் ரூ.8,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது மேலும் அதன் டிரான்ஷிப்மென்ட் மையத்தின் திறன் விரைவில் மூன்று மடங்காக அதிகரிக்கும் இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இது ஒரு முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கிறது.இதுவரை இந்தியாவின் 75 சதவீத டிரான்ஷிப்மென்ட் நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடத்தப்பட்டன, இதன் விளைவாக நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு ஏற்பட்டது இருப்பினும், இது மாறத் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார் 

முன்னதாக இதுவரை, இந்தியாவின் 75 சதவீத டிரான்ஸ்ஷிப்மென்ட் கொள்கலன்கள் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தால் கையாளப்பட்டன இதனால் அந்நியச் செலாவணி மற்றும் வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டது விழிஞ்சம் அந்தப் போக்குவரத்தில் பெரும்பகுதியை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News