9 நாட்கள் நடைப்பயணம்.. 2 நாட்கள் பட்டினி.. சாப்பிட வைத்து வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிய திருச்சி போலீசார்.!

9 நாட்கள் நடைப்பயணம்.. 2 நாட்கள் பட்டினி.. சாப்பிட வைத்து வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிய திருச்சி போலீசார்.!

Update: 2020-04-12 10:32 GMT

வேளாங்கண்ணியில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு நடந்து சென்ற குடும்பத்துக்கு உணவு வாங்கி கொடுத்து சொந்த ஊருக்கு வாகனத்தில் அனுப்பிய திருச்சி போலீசார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மஞ்சம்பட்டியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே ஒரு குடும்பம் வாடிய நிலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களை விசாரித்ததில், வேளாங்கண்ணியில் குடும்பத்துடன் செங்கல் சூளையில் வேலை பார்த்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு செல்ல முயன்றபோது பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் கடந்த 9 நாட்களாக சிறுமி உட்பட 6 பேர் நடந்தே சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றோம்.

கடந்த 2 நாட்களாக சாப்பிடவில்லை பசியால் இருக்கிறோம் என்று கூறினர். இதனை கேள்விப்பட்ட போலீசார் சாப்பிட வைத்து தங்களின் கைகளில் இருந்த பணத்தை கொடுத்தும் காய்கறி வாகனத்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

மேலும், பத்திரமாக ஒட்டன்சத்திரத்தில் இறக்கிவிட்டு பின்னர் மணப்பாறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று லாரி டிரைவரிடம் போலீசார் கூறியுள்ளனர்.

இது போன்றவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அன்றாடம் வேலைசெய்யும் தொழிலாளர்கள் பலர் தமிழகத்தில் ஆங்காங்கே உள்ளனர்.

அவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி அவர்களின் பசியை போக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Similar News