900 கோடி மதிப்பிலான சீன உதிரி பாகங்கள் ஆர்டர் கேன்சல் - இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற சபதம் ஏற்ற ஹீரோ சைக்கிள்ஸ்!

900 கோடி மதிப்பிலான சீன உதிரி பாகங்கள் ஆர்டர் கேன்சல் - இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற சபதம் ஏற்ற ஹீரோ சைக்கிள்ஸ்!

Update: 2020-07-06 06:07 GMT

இந்திய நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ், இனிமேல் சீன நிறுவனங்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்ததோடு, அந்நாட்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட 900 கோடி ரூபாய் மதிப்பிலான வணிக உடன்பாட்டை முறித்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இ-சைக்கிள், இ-பைக் ஆகியவற்றை உற்பத்தி செய்ய சீன நிறுவனங்களிடம் இருந்து உதிரிப்பாகங்களைக் கொள்முதல் செய்து வந்தது.

அடுத்த 3 மாதங்களில் 900 கோடி ரூபாய் மதிப்பிலான, சைக்கிள் உதிரிப் பாகங்களைச் சீன நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்களை ஏற்கெனவே வழங்கியிருந்தது.

தற்போது இந்தியா-சீனா இடையிலான கால்வன் மோதலையடுத்து சீன நிறுவனங்களிடம் 900 கோடி ரூபாய் மதிப்பில் வணிகம் மேற்கொள்ளச் செய்திருந்த உடன்பாடுகளை முறித்துக் கொண்டுள்ளதாக ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத் தலைவர் பங்கஜ் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

இனிமேல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய இருந்த உதிரி பாகங்களை, இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Similar News