பா.ஜ.க ஆட்சியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது- ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

பாஜக ஆட்சியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2024-04-06 05:43 GMT

மத்தியில் பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறினார். இந்தியாவில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார். கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குலூர் பேரவை தொகுதியில் கே அண்ணாமலை வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மின் கட்டனத்தை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தி விட்டது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு சூரியசக்தி மின்சாரம் மட்டுமே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பவர் டெக்ஸ்ட் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும். அதன் மூலம் விசைத்தறி உரிமையாளர்கள் பயன் பெறுவார்கள். மத்திய அரசு சார்பில் சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வந்து ஏற்றுமதி வளாகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூபாய் 940 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆனைமலை ஆறு நல்லாரை திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்துவோம். நீர் மேலாண்மை திட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்றார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-பாஜக ஆட்சியில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தவறாக தெரிவித்துள்ளார் .நாட்டில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை உள்ளது. வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பாஜக ஆட்சி மிகச் சிறப்பாக செயல்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Similar News