ஆன்லைன் டிரேடிங் என்ற புதிய மோசடி : மக்களே உஷார்- காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் டிரேடிங் என்ற புதிய ஏமாற்று பேர்வழி இணையதளத்தை ஆக்கிரமித்து இருப்பதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-08 09:45 GMT

'ஆன்லைன் டிரேடிங்' என்ற பெயரில் புதிய மோசடியை மர்ம நபர்கள் அரங்கேற்றி வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மர்மநபர்கள் மோசடி செய்வதாக தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பொதுமக்கள் ஒவ்வொரு வகையான மோசடியை சந்தித்து வரும் மோசமான சூழலில் தான் நாம் உள்ளோம்.


இப்பொழுது புதியதாக இந்த ஆன்லைன் டிரேடிங் கிளம்பி உள்ளது. சம்பந்தப்பட்ட மோசடியாளர்கள் இலவசமாக குறிப்புகளை வழங்கி வர்த்தகம் செய்ய தூண்டுவதுடன் லாபம் ₹50 லட்சத்தை அடைந்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என்று ஏமாற்றுவார்கள் என எச்சரித்துள்ள காவல்துறை, அவ்வாறு பணத்தை பறிகொடுத்தவர்கள் 1930 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


எனவே எதனையும் வரும் முன்னர் தடுப்பதே சாலச்சிறந்தது. பொதுமக்கள் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான எந்த அறிவிப்புகளையும் விளம்பரங்களையும் நம்பி ஏமாற வேண்டாம். இங்கு ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்களே முதல் குற்றவாளி. நாம் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எவரும் நம்மை ஏமாற்ற முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

SOURCE :NEWS 


.

Similar News