ஊரடங்கு உத்தரவை மீறிய ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது இரண்டாவது வழக்கு பாய்ந்தது.!

ஊரடங்கு உத்தரவை மீறிய ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது இரண்டாவது வழக்கு பாய்ந்தது.!

Update: 2020-04-15 11:04 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, அரசு சாா்பில் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல பல்வேறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்தச் செலவில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனா். இதனிடையே

காமராஜ் நகா் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாா், நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட சபரி படையாட்சி வீதியில் உள்ள பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கினாா்.

அப்போது, 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொருள்களை வாங்க குவிந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த உருளையன்பேட்டை போலீஸாா், அங்கிருந்த பொதுமக்களை கலந்து போகச் செய்தனா்.

இதுகுறித்து துணை வட்டாட்சியா் ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாா் மீது வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வழக்குப் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News