முதன்மை உணவு பொருள்களின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு செய்த நடவடிக்கை

அரிசி , கோதுமை, மைதா போன்ற உணவு பொருட்களின் சில்லரை விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சில நடவடிக்கைகளை செய்து வருகிறது.

Update: 2023-11-10 18:00 GMT

அரிசி , கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முன் முயற்சியின் ஒரு பகுதியாக கோதுமை, அரிசி ஆகியவை வாரந்தோறும் மின்னணுமுறையில் வெளிச்சந்தையில் ஏலம் விடப்படுகின்றன . இதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற 20 வது மின் ஏலத்தில் மூன்று லட்சம் டன் கோதுமை மற்றும் 2.25 லட்சம் டன் அரசு ஏலம் விடப்பட்டது .


கோதுமை அதன் தரத்தின் அடிப்படையில் குவிண்டாலுக்கு ₹2,327.04 மற்றும் ரூபாய் 2243.74 என விற்பனை செய்யப்பட்டது. உள்நாட்டுத் திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் டன் கோதுமை மத்தியபட்டகசாலை என்.சி.சி.எஃப் நாபெட் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவை மாவாக மாற்றப்பட்டு பாரத் ஆட்டா என்ற பெயரில் கிலோ ரூபாய் 27.50க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த ஏழாம் தேதி வரை 6051 டன் கோதுமை 3 கூட்டுறவு சங்கங்களால் பெறப்பட்டுள்ளன.


SOURCE :DAILY THANTHI

Similar News