புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரஜினி, என்ன கூறியுள்ளார் ?

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரஜினி, என்ன கூறியுள்ளார் ?

Update: 2020-04-14 13:14 GMT

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் அதில் அவர் பேசியிருப்பது ஆவது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும், கொரோனா வைரஸால் முழு உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல, உங்களைப் பிரிந்து இருக்கும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சதா நேரமும் உங்களைப் பற்றி தான் சிந்தனை உங்களைப் பற்றித்தான் கவலை.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாட்டுடைய அரசு என்ன கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து, உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் உறவினர்களுக்கும் இந்த ஆண்டு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு! நலமுடன் வாழ்க! கவலைப்படாதீங்க! இதுவும் கடந்து போகும்! எனப் பேசியுள்ளார்.

https://twitter.com/rajinikanth/status/1250016486174818307?s=19



 


Similar News