ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்ற பூரிப்பில் மகிழ்ந்த நடிகர் நடிகைகள்
சிறந்த நடிகர் நடிகைகளுக்கு தேசிய விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
2021- ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் 69- ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24- ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படமாக நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி நம்பி விளைவு என்கிற படம் அதன் இந்தி மொழிபெயர்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது. இதே போல சிறந்த பொழுதுபோக்கு வழங்கிய பிரபல படமாக ஆர் .ஆர்.ஆர் படம் அறிவிக்கப்பட்டு இருந்தது .
சிறந்த நடிகராக புஷ்பா பட கதாநாயகன் அல்லு அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதேபோல கங்குபாய் காட்டிய வாடி என்ற இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அலியா பட் இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கீர்த்தி சனோன் ஆகியோர் சிறந்த நடிகைக்காக தேர்வு பெற்றனர் . சிறந்த பின்னணி பாடகிக் காண விருது இரவின் நிழல் தமிழ் படத்தின் மாயவா தூயவா பாடலுக்காக பாடல் ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது.
சிறந்த திரைப்படமாக கடைசி விவசாயி படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதே போல பொழுதுபோக்கு அல்லாத படங்கள் பிரிவில் பி.லெனின் இயக்கத்தில் உருவான 'சிறப்பிகளின் சிற்பங்கள்' படம் சிறந்த கல்வி படத்துக்கான விருதுக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் கருவறை படம் சிறப்பு விருதுக்கும் தேர்வு பெற்றன. இந்த விருதுகளின் தொடர்ச்சியாக திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகை வகிதா ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.
SOURCE :DAILY THANTHI