"மும்மொழி கொள்கையை எதிர்ப்பதால் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்" : உண்மையை தைரியமாக போட்டு உடைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

"மும்மொழி கொள்கையை எதிர்ப்பதால் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்" : உண்மையை தைரியமாக போட்டு உடைத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

Update: 2019-07-25 19:04 GMT

பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தன் மனதில் பட்டதை தில்லுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், என்னுடைய மகள் தனியார் பள்ளியில் இந்தியை ஒரு பாடமாக பயின்று வருகிறாள்.


ஆனால் நான் எனது மகளுக்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இந்தியை எதிர்க்கும் விஷயத்தில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.


நான் மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன். 3-வது விருப்ப மொழி வேண்டாம் என சொல்லும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பலரும் இந்தி படித்து டெல்லியில் எம்.பி, மந்திரி ஆகி நன்றாக உள்ளனர். அதே சமயம் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய, தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத மாணவ-மாணவிகள் 3-வதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் தட்டிகழிப்பது அந்த மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய ஒரு அநீதியாக தான் பார்க்கிறேன்.


இந்த உண்மையை யாராவது பேசமாட்டார்களா? என எதிர்பார்த்து காத்திருந்தேன். எல்லோரும் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். என்கிற வேகம் இருந்துகிட்டே இருக்கும். தயவு செய்து கட்சியின் சார்பில் இந்த கருத்தை பேசவில்லை


ஏனெனில் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இந்தி மொழி கற்கும் வாய்ப்பை இழந்து கொண்டிருக்கின்றனர். வாக்குகளை பெறுவதற்காக இந்தியை எதிர்ப்பதாக அரசியல்வாதிகள் பொதுவெளியில் கூறிக் கொள்கின்றனர்.


ஆனால் அது உண்மை இல்லை. புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்யுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.


திடீர் போராளி நடிகர் சூர்யா உள்பட கல்வி கொள்கையை என்னவென்று புரிந்துகொள்ளாமல் தமிழகத்தில் கண்மூடி தனமாக பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது


Similar News