ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு புதிய விசா முறை அறிமுகம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

Update: 2021-08-17 05:46 GMT

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

அதிகமானோர்கள் இந்தியா வருவதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான விசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தி உள்ளது.

இதற்காக மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Al Jazeera

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/17090013/2931257/Tamil-News-Afghanistan-crisis-MHA-introduced-new-category.vpf

Tags:    

Similar News