"காலணிகளை அணிய விடாமல் வெளியேற்றப்பட்டேன்"- வீடியோ வெளியிட்ட அஷ்ரப் கனி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரத்தில் தாலிபான்கள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Update: 2021-08-19 02:24 GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரத்தில் தாலிபான்கள் நுழைந்ததும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இதனிடையே, நாட்டில் இக்கட்டான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள அஷ்ரப் கனி சமூக வலைதள மூலம் இன்று ஒரு வீடியா ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அஷ்ரப் கனி கூறும்போது, எனது காலணிகளை கூட அணிய விடாமல் வெளியேற்றப்பட்டேன். உள்ளூர் மொழி பேசத்தெரியாதவர்கள் சிலர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து என்னை தேடினர். இதனை தொடர்ந்து நான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். இவை அனைத்தும் சில மணி நேரங்களிலேயே நடந்தது.

மேலும், தாலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது பற்றி கலந்து ஆலோசிக்க நான் முயற்சி செய்ய இருந்தேன். அரசுடைய முன்னாள் அதிகாரிகள் மற்றும் தாலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நான் மீண்டும் எனது நாட்டுக்கு திரும்புவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy:Republic World

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/19050505/2931576/Tamil-News-Afghanistan-President-Ashraf-Ghani-Details.vpf

Tags:    

Similar News