டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை! பாஜக தலைவர் அமீத்ஷா விரைவில் வீடு திரும்புகிறார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை! பாஜக தலைவர் அமீத்ஷா விரைவில் வீடு திரும்புகிறார்

Update: 2019-01-17 16:42 GMT
தொற்று காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பாஜக அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர். .
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பாஜக தேர்தல் பணிகளை நாடெங்கிலும் முடுக்கிவிட்டுள்ளது. தேர்தல் பணிகளை முன்னிட்டு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமீத்ஷா அடிக்கடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கடும் பனிப் பொழிவு இருந்து வரும் நிலையில் அமீத்ஷாவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் தொடர்பான நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் அமீத்ஷாவின் உடல் நிலை கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறி்த்து பா.ஜ.,வின் ராஜ்யசபா உறுப்பினர் அனில்பலூனி கூறி இருப்பதாவது:  "பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தொற்றுக் காய்ச்சல் காரணமாக, டில்லியில் உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவ மனையில் நேற்று(ஜன.,16) இரவு அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலை தேறி வருகிறது. விரைவில் குணம் பெற்று இரண்டொரு நாளில் வீடு திரும்புவார் " என கூறினார்.
தொடர்ந்துஅமித்ஷா 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், 'தொற்றுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளேன். கடவுள் மற்றும் மக்களின் அன்பு வேண்டுதலுடன் விரைவில் குணமடைவேன்' என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமித்ஷா விரைவில் குணமடைந்து வருவதாகவும், அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும், அவர் நலம் பெற ஒவ்வொருவரும் செய்த பிரார்த்தனையால் விரைவி்ல் உடல் நலம் தேறி வருகிறார் என கூறினார்.

Similar News