துணை தேர்தல் கமிஷனராக அஜய் பாடூ - மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை தேர்தல் கமிஷனராக அஜய் பாடூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-10-03 04:15 GMT

மத்திய அரசு நேற்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்தது. அதன்படி அஜய் பாடூ துணை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் 1999 ஆம் ஆண்டு குஜராத் பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். 2024 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி வரை அவர் பொறுப்பில் இருப்பார் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் 35 மூத்த ஐ.ஏ.அஎஸ் அதிகாரிகள் பல்வேறு மத்திய அரசு துறைகளின் இணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மைகாவ் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆகாஷ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.


டி. செந்தில் பாண்டியன் மத்தியபபுவி அறிவியல் அமைச்சகத்தின் இணை செயலாளராகவும் டி.ஜே.கவிதா உணவு மற்றும் போது விநியோகத் துறையின் இணை செயலாளர் ஆகவும் பணியார்த்தப்பட்டுள்ளார்.





 


Similar News