வன்முறையில் ஈடுபடும் வக்கீல்களுக்கு அகில இந்திய பார் கவுன்சில் கடும் எச்சரிக்கை!

வன்முறையில் ஈடுபடும் வக்கீல்களுக்கு அகில இந்திய பார் கவுன்சில் கடும் எச்சரிக்கை!

Update: 2019-12-23 09:02 GMT


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் மற்றும் சில மத அமைப்புகள் நாடெங்கும் போராட்டங்களைத் தூண்டி வருகின்றன. பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு பொது சொத்துக்கள் சேதப்படுத்தப் படுகின்றன. வன்முறையாளர்கள் போலீசாரையும், பாதுகாப்பு படையினரையும் கல் வீசி தாக்கி வருகின்றனர்.


சில மாநிலங்களில் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களுடன் கைகோர்த்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில்,  அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா இத்தகைய சம்பவங்களை கண்டித்து, எச்சரித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், மத்தியஅரசு அமல் படுத்திவரும் புதிய குடியுரிமை திருத்த சட்டம் சரியானதுதானா என்பது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யவுள்ளது. இந்த நிலையில் சில அரசியல் சுய நல சக்திகள் குறுகிய நோக்கத்தில் தூண்டிவிடும் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடக் கூடாது. வக்கீல்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். ஆனால் இவர்கள் சட்டம் - ஒழுங்குக்கு எதிராக ஆர்பாட்டம் செய்வதும், வன்முறைகளில் ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கது. 



குறிப்பாக போலீசார் மீதும் பாதுகாப்பு படைகள் மீதும் வக்கீல்கள் நடத்திய போராட்டத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு நீதிமன்ற நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இனிமேல் பார் கவுன்சிலை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாராவது இந்த அறிக்கையை மீறி இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவது பார் கவுன்சிலுக்கு தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Source:-https://www.indiatoday.in/india/story/caa-bci-condemns-attack-on-police-appeals-to-lawyers-to-take-active-role-in-defusing-violence-1630627-2019-12-22


Similar News