இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட அசர வைக்கும் 'அர்மாடோ' வாகனம்!
1000 கிலோ எடை ஏற்றப்பட்டாலும் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அசர வைக்கும் அர்மாடோ வாகனம்.
இந்திய ராணுவத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகர வாகனம் அர்மாடோ 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கியிருக்கிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட மகேந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள் , அதிக அளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. மகேந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் 7 மற்றும் லெவல் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அது நவீன வாகனம் என்ற வகையில் இது சிறப்பு படையினர் தீவிரவாத தடுப்பு படை எல்லை பாதுகாப்பு படை மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்திறனை பொறுத்தவரை இந்த யூனிட் 215 hp பவர் 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் ஃபோர் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் ஆயிரம் கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் ஆர்மாடோ மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பஞ்சரான நிலையில் கூட 50 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதைத்தவிர அறுமாறு மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது .தோற்றத்தில் ஹெம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
SOURCE :Kaalaimani.com