ராகுல் காந்தியின் தரக்குறைவான, பொய்யான பேச்சை கண்டித்து அம்பானி நிறுவனம் கண்டன அறிக்கை : வேதனையில் காங்கிரசார் !!

ராகுல் காந்தியின் தரக்குறைவான, பொய்யான பேச்சை கண்டித்து அம்பானி நிறுவனம் கண்டன அறிக்கை : வேதனையில் காங்கிரசார் !!

Update: 2019-05-07 13:10 GMT


தேர்தலை முன்னிட்டு பிரச்சாரக் கூட்டங்களில் ராகுல் காந்தி மோடியை எதிர்க்கும் நோக்கத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் கண்டபடி பேசிவருகிறார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில்    ரிலையன்ஸ் குழுமம் ராகுலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


காங்., தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரத்தில் எங்கள் குழும தலைவர் அனில் அம்பானியை பெரு முதலாளித்துவ குணமுடைய நேர்மையற்ற தொழிலதிபர் என அவதுாறாக உள்நோக்கத்துடன் உண்மைக்கு மாறான பொய்களை பேசி வருகிறார் என்பதால் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன்  நாங்கள் ராகுலுக்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறோம்.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004 முதல் 14 வரை ஆட்சியில் இருந்தது. அப்போது தான் ரிலையன்ஸ் குழுமத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு 'ஆர்டர்'கள் வழங்கப்பட்டன. இந்தவகையில் சாலை, தொலைதொடர்பு, மின்சாரம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான ஒப்பந்தங்களை வழங்கியது ராகுல் காந்தி தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தானே தவிர வேறு எந்த ஆட்சிலும் அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம்.


அப்படியென்றால் முந்தைய காங்கிரஸ் அரசு பெருமுதலாளித்துவ குணமுள்ள நேர்மையற்ற தொழிலதிபரை 10 ஆண்டு காலமாக ஆதரித்து வந்ததா என்பதை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும். ராகுல் தனது தேர்தல் பிரசாரத்தில்


தொடர்ந்து அனில் அம்பானியை தரக்குறைவாக பேசிவந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் நாங்கள் அமைதி காத்து வந்தோம்.


சமீபத்தில் ராகுல்காந்தி உச்ச நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். தேர்தல் பிரசார சூட்டில் பேசி விட்டதாக அவர் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அனில் அம்பானி பற்றி அவர் உண்மைக்கு மாறாக தெரிவித்த பல தகவல்களில் இதுவும் ஒன்று என சமீபத்திய பேச்சையும் நாங்கள் புறம் தள்ளுகிறோம், என கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ராகுல் காந்தியின் பொறுப்பற்ற பேச்சு, நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து காங்கிரசார் வேதனை அடைந்து வருவதாக கூறப்[படுகிறது.


Similar News