"இது தான் சாக்கு என்று ஐயப்ப பக்தர்கள் விவகாரத்தில் சதிவேலையில் ஈடுபடும் ரத்தவெறி கேரள கம்யூனிஸ்ட் கட்சி" - அமித் ஷா கண்ணூரில் கடும் தாக்கு!

"இது தான் சாக்கு என்று ஐயப்ப பக்தர்கள் விவகாரத்தில் சதிவேலையில் ஈடுபடும் ரத்தவெறி கேரள கம்யூனிஸ்ட் கட்சி" - அமித் ஷா கண்ணூரில் கடும் தாக்கு!

Update: 2018-10-27 17:05 GMT

கேரள மக்கள் மற்றும் ஐய்யப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு பக்கபலமாக பா.ஜ.க மலை போல் உறுதியுடன் நிற்கும் என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.



சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கேரளம் முழுவதுமாக சுமார் 2,000 பேரை கைது செய்துள்ள மாநில காவல்துறை, அது தொடர்பாக 450 வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், பக்தர்கள் அதிகளவில் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சுரேஷ் குமார், அனோஜ் குமார் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு விசாரித்தது. அப்போது, அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் மாநில அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நீதிபதிகள் அமர்வு எச்சரித்தது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுவதில் பக்தர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரித்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், சபரிமலைக்கு வருகை தருவது உண்மையான பக்தர்கள்தானா? என்பதை காவல்துறையினர் விசாரிக்கவும் அறிவுறுத்தியது.
கேரள மாநிலம் கண்ணூரில் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தொண்டர்களை கேரள அரசு குறிவைப்பதாக குற்றம் சாட்டினார். மத நம்பிக்கைகளுக்கும், அரசின் துன்புறுத்தல்களுக்கும் இடையே கேரளா போராடி வருவதாகவும், சபரிமலை விவகாரத்தை கேரளத்தின் இடதுசாரி அரசு தவறாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களை கைது செய்திருப்பதாகவும் அவர் கூறினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது என்ற பெயரில், பக்தர்களை ஒடுக்க வேண்டாம் என கேரள முதலமைச்சரை எச்சரிப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் கோவில்களுக்கு எதிரான கம்யூனிச சதி என்றும் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். சபரிமலை தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்கள், பாரம்பரியத்தை காப்பதற்கான போராட்டங்கள் எனவும் அமித் ஷா விவரித்துள்ளார்.
மேலும், சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ, அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. பல விதமான விதிகளும், வழிபாடுகளும் அது போன்று உள்ளன என்பதையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என்று அமித் ஷா எச்சரித்துள்ளார்.

Similar News