முதன்முறையாக தனியார் செக்யூரிட்டி பணியாளர்களின் நல வாழ்வுக்காக சிந்தித்து திட்டமிடும் அமித்ஷா - தனி இணையம் தொடங்கி வைத்தார்!!

முதன்முறையாக தனியார் செக்யூரிட்டி பணியாளர்களின் நல வாழ்வுக்காக சிந்தித்து திட்டமிடும் அமித்ஷா - தனி இணையம் தொடங்கி வைத்தார்!!

Update: 2019-09-25 06:01 GMT

போலீஸ், துணை இராணுவப்படைகள் தேசத்துக்கான  பாதுகாப்பு வழங்குவது போன்றே தனியார் சொத்துக்களுக்கு 24  மணி நேரமும் பாதுகாப்பு வழங்குபவர்கள் செக்யூரிட்டிகள் என அழைக்கப்படும் காவலாளிகள் ஆவர். இவர்கள் ஒரு நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்தாலும் முறைசாரா தொழிலாளர்களை விட மோசமான, பாதுகாப்பற்ற பின்னணியில்தான் இவர்கள் வாழ்க்கை இருக்கிறது. எனவே மற்ற அரசு காவலர்களைப் போல இவர்களை யாரும் கவுரவமாக பார்ப்பதில்லை. இவர்களின் நலன் குறித்து இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசோ அல்லது இந்திய அரசோ இது வரை சிந்திக்கவில்லை. அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கூட சிந்தித்ததில்லை.


இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன் முறையாக செக்யூரிட்டிகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் அவர்கள் பணியை வரன்முறை செய்யும் நோக்கத்தில் சில திட்டங்களை தொடங்கும் நோக்கத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் இணைய தளத்தை நேற்று தொடங்கி வைத்தார்.


பிறகு அவர் பேசியதாவது:-


நாட்டில் போலீஸ், துணை ராணுவப்படையினர் எண்ணிக்கை 24 சதவீதம் மட்டுமே. ஆனால், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் செக்யூரிட்டி எனப்படும் காவலாளிகள் எண்ணிக்கை 76 சதவீதம் ஆகும்.  மிக முக்கியதத்துவம் வாய்ந்த பணி புரியும் இவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அவர்களது நல்வாழ்கைக்கான திட்டங்களை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
உதாரணமாக சுகாதார காப்பீட்டு திட்டம், மருத்துவ பரிசோதனைகள் உட்பட பல வசதிகளையும் அளிக்க வேண்டும். ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் அவர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, அதன்மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் பல நன்மைகளையும் அவர்களுக்கு செய்ய முன் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Similar News