மேலும் ஒரு அரசு மருத்துவமனையின் அவலம் - ஒரு வயது குழந்தைக்கு தவறாக அறுவை சிகிச்சை செய்த மதுரை ராஜாஜி மருத்துவமனை

ஒரு வயது குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-11-24 05:58 GMT

ஒரு வயது குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் மீது குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்-கார்த்திகா தம்பதியினருக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சியில்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் அப்போதைய குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் ஓராண்டு கழித்து நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முன்கூட்டியே கூறியிருந்தால் கடந்த செவ்வாய்க்கிழமை நாக்கில் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய குழந்தை அனுமதிக்கப்பட்டது அங்குள்ள மருத்துவர்கள் அந்த ஆண் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதை கண்டு அதிர்ந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டபோது தவறு நடந்துவிட்டதாக கூறி மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவர்கள் அலட்சியம் குறித்த குழந்தையின் தந்தை அஜித்குமார் மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Source - Polimer News

Similar News