ஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா..? காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.?

ஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா..? காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.?

Update: 2019-10-15 11:52 GMT

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தின்படி படி நடவடிக்கை எடுத்ததற்கு, அடுக்குமுறை, சர்வாதிகாரம் என்று கூச்சலிட்டு வரும் கம்யூனிஸ்ட்டுகள், அவர்களின் தோழர்கள் ஆளும் நாட்டில் நடப்பது குறித்து கேள்வி கேட்க துளியளவும் தைரியமில்லை என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


அவர்களின் கம்யூனிச சிந்தாந்தங்கள் எல்லாம், இந்தியாவுக்குள் மட்டும் தானா? பிறகு ஏன் சீன அதிபர் மாமல்லபுரம் வந்த பொழுது தோழர் ஷி ஜின்பிங் வருகிறார் என்று வரவேற்றார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கடந்த சில வாரங்களாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு கருத்து தெரிவித்த சீனா அதிபர் ஷி ஜின்பிங், "சீனாவை பிரிக்க நினைத்தால், நசுங்கிய உடல்களும், நொறுங்கிய எலும்புகளும் தான் மிஞ்சும்" என்று கூறி இருக்கிறார்.


கொஞ்சம் இதனை இந்தியாவோடு தொடர்புபடுத்தி பாருங்கள், எவ்வித கலவரமோ, உயிர் சேதமோ ஏற்படக்கூடாது என்று முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பாசிசம் என்று கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிக்கும் அரசு தான், மக்கள் நலனுக்காக இத்தகைய மென்மையான போக்கை கையாள்கிறது.


தங்கள் தோழர் என்று கூறி வந்த சீனா கம்யூனிஸ்ட்டுகள் தான், இன்றைக்கு "நசுங்கிய உடல்களும், நொறுங்கிய எலும்புகளும்" என்று கொடுங்கோல் ஆட்சி புரிபவர்கள் கூறுவதை போல கூறி வருகின்றனர். இந்தியாவில் தொட்டதில் எல்லாம் குறை கூறும் இவர்கள், ஒரு தடவை தங்கள் தோழர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்டு பார்க்கலாமே. அது முடியுமா?


Similar News