'Article 15' ரீமேக்கை இயக்கும் அருண் ராஜா - கதாநாயகன் யார் தெரியுமா?

'Article 15' ரீமேக்கை இயக்கும் அருண் ராஜா - கதாநாயகன் யார் தெரியுமா?

Update: 2020-04-17 05:13 GMT

இந்திய அரசு சட்டத்தில் முதன்மை சட்ட பிரிவு 15ல் இடம்பெற்றுள்ள தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு க்ரைம் த்ரில்லர் பாணியில் கடந்த ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் 'Article 15'. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றத் தமிழ் உட்படப் பிராந்திய மொழிகளில் போட்டி நிலவியது.

தற்போது இதன் தமிழ் ரீமேக்கை இயக்கவிருக்கிறார் 'கனா' புகழ் அருண் ராஜா காமராஜ். இதில் நாயகனாக உதயநிதி நடிக்கிறாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

Similar News