ராகுல்காந்தியின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அருண்ஜெட்லியின் பதில்

ராகுல்காந்தியின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அருண்ஜெட்லியின் பதில்

Update: 2018-11-17 18:49 GMT




பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, பாஜக தேர்தல் அறிக்கையை அருண்ஜேட்லி வெளியிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நெறிமுறைக்காக எடுக்கப்பட்டதே அன்றி, அரசியலுக்காக எடுக்கப்படவில்லை என்றார். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், மத்திய மாநில அரசுகளுக்கும் கணிசமாக வருவாய் உயர்ந்துள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.



இதனையடுத்து  ஆந்திர பிரதேசத்தில் சி.பி.ஐ. அமைப்பு சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது.  இந்த உத்தரவை அடுத்து ஆந்திரா எல்லைக்குள் சி.பி.ஐ. எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது என்று கூறப்படுகிறது. இது குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் கருத்து தெரிவிக்கையில், மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் எனது மாநிலத்திற்குள் சி.பி.ஐ. நுழைய கூடாது என கூறுவார்கள்.



ஊழல் விவகாரத்தில் எந்த மாநிலத்தின் மீதும் இறையாண்மை என்பது கிடையாது.  ஆந்திராவின் நடவடிக்கையானது அச்சத்தினால் ஏற்பட்டு உள்ளது.  இந்த தருணத்தில் இதனை தவிர்த்து வேறு எதுவும் நான் கூறவில்லை என கூறினார். இந்தியாவில் மத்திய அமைப்பு ஒன்றை நாம் கொண்டுள்ளோம்.  இதன் கீழ் தொடக்கத்தில் அரசு ஊழியர்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட சி.பி.ஐ. அமைப்பு ஆனது, மாநிலங்கள் அல்லது நீதிமன்றங்கள் பரிந்துரைக்கும் சில தீவிர வழக்குகளையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்




Similar News