அயோத்தி ராமர் கோவிலுக்கு அடியில் "டைம் கேப்சூல்" உண்மையா? #Ayodhi #RamMandhir

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடியில் "டைம் கேப்சூல்" உண்மையா? #Ayodhi #RamMandhir

Update: 2020-07-29 02:30 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ராமர் கோவில் மற்றும் ராமஜென்ம பூமி வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில், கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடியில் சுமார் 2,000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் அதாவது ராம ஜென்மபூமி தொடர்பான வரலாறு மற்றும் உண்மைகளை உள்ளடக்கிய ஒரு கேப்சூல் வைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது.

தீர்த்த சேத்திரம் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இது பற்றி கூறிகையில் " ராமர் கோயில் கட்டுமான இடத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி டைம்ஸ் கேபிள் வைக்கப்பட இருப்பதாக வெளியாகும் அனைத்து செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை, அதுபோன்ற எந்த தகவலையும் நம்ப வேண்டாம்" என அவர் கூறியுள்ளார்.

Similar News