பால்தாக்கரேவின் சிந்தனைகளுக்கு எதிராக பாவங்களை செய்கிறது சிவசேனா ! மகாராஷ்டிரா பா.ஜ.க. மூத்த தலைவர் குற்றச்சாட்டு

பால்தாக்கரேவின் சிந்தனைகளுக்கு எதிராக பாவங்களை செய்கிறது சிவசேனா ! மகாராஷ்டிரா பா.ஜ.க. மூத்த தலைவர் குற்றச்சாட்டு

Update: 2019-11-25 05:30 GMT

சிவசேனாவை தோற்றுவித்த பால்தாக்கரே ஒரு போதும் பா.ஜ.க.விடம் முரண்பாடுடன் நடந்து கொண்டதில்லை. ஆனால் இன்று சிவசேனா சொந்த கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு சுயநலத்துக்காக கொள்கைகளுக்கு நேர் எதிர்மாறான காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறது. ஆட்சி அமைக்கவும் முடியாமல் அவமானப்பட்டு நிற்கிறது. 



இதற்கெல்லாம் காரணம் கட்சியின் நிறுவனர் பால்தாக்கரே கடைபிடித்த கொள்கைகளை கைவிட்டு பா.ஜ.க.வையும்  கைவிட்டு ஓடிப்போனதுதான். இது கட்சி நிறுவனர் பால்தாக்கரேவுக்கு எதிராக அந்த கட்சினர் செய்யும் பாவமாகும் என்றார் மகாராஷ்டிரா பா.ஜ.க.. மூத்த தலைவரான அசிஷ்ஷேலார்.


நேற்று பா.ஜ.க. சட்டசபை எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தனது கருத்தைக் கூறினார்.



அவர் மேலும் கூறுகையில் "கவர்னர் நடத்தவுள்ள பெரும்பான்மை குறித்த சோதனையில் எப்படி வெல்வது என்பது குறித்து  பேசினோம்.
பல சுயேட்சை எம்எல்ஏக்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கின்றனர். அவர்களுடனான தனிக் கூட்டத்தையும் பாஜக விரைவில் நடத்தும். நிச்சயம் பலப்பரீட்சையில் நாங்கள்தான் வெல்வோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.   


Similar News