பெங்களூருவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 5 நாள் சர்வதேச விமான கண்காட்சி - ரபேல் விமான சாகஸங்களை காண ஆவலுடன் காத்திருக்கும் பார்வையாளர்கள்!

பெங்களூருவில் வருகிற 20-ஆம் தேதி முதல் 5 நாள் சர்வதேச விமான கண்காட்சி - ரபேல் விமான சாகஸங்களை காண ஆவலுடன் காத்திருக்கும் பார்வையாளர்கள்!

Update: 2019-02-14 10:00 GMT

இந்திய ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு விமான கண்காட்சி நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விமான கண்காட்சி வருகிற 20-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து 365 விமானங்கள் வரவுள்ளன. இந்த நிலையில் பிரான்ஸ் ராணுவம் சார்பில் பங்கேற்க ரபேல் விமானங்கள் முன் கூட்டியே வந்துவிட்டன. இதை நேரில் பார்க்கவும், இந்த விமானங்களின் சாகசங்களை ரசிக்கவும் பெங்களூர் வாசிகள் ஆவலுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.   


விமான சாகச நிகழ்ச்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை நடைபெறும். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானமான சுகோய், சாராங், சூரிய கிரண், நமது நாட்டின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜேஸ் காக்பிட், ஆளில்லாத விமானமான ருஸ்த்தம்-1, ருஸ்த்தம்-2, போர் விமானங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 5.4 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு களித்தனர். இந்த ஆண்டு மேலும் சில லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News