வங்கதேச நடிகரை வரவழைத்து மம்தா கட்சி பிரச்சாரம் !! இந்தியாவிலிருந்து நடிகர் வெளியேற்றம்

வங்கதேச நடிகரை வரவழைத்து மம்தா கட்சி பிரச்சாரம் !! இந்தியாவிலிருந்து நடிகர் வெளியேற்றம்

Update: 2019-04-17 09:40 GMT


வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது மற்றும் இந்திய நடிகர்கள் மேற்கு  வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கென்கையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்தது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை கோரியது.


அகமது விசா நடைமுறைகளை மீறியுள்ளாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என கொல்கத்தா வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு (பாரின் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் - எப்ஆர்ஆர்ஓ) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா-வங்காளதேசம் எல்லையில் ஹெம்தாபாத், காரான்திகாய் பகுதியில் அகமது பிரசாரம் மேற்கொண்டார். 


அகமது பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிரசாரம் செய்த அகமதுவை வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.


பெர்டோஸ் அகமதுவின் விசாவை ரத்து செய்து வெளியேற உத்தரவிட்ட இந்திய உள்துறை அமைச்சகம், அவரை கருப்பு பட்டியலிலும் இணைத்தது.


Similar News