வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க மறுப்புத் தெரிவித்தால் புகார் அளிக்கலாம் - தாமே தீர்வு காண முயற்சி எடுப்பதாக நிர்மலா சீதாராமன் உறுதி!

வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க மறுப்புத் தெரிவித்தால் புகார் அளிக்கலாம் - தாமே தீர்வு காண முயற்சி எடுப்பதாக நிர்மலா சீதாராமன் உறுதி!

Update: 2020-08-01 08:28 GMT

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அவசர காலக் கடன் வழங்க, வங்கிகள் மறுக்கக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

அவசர கடன் வசதியின் கீழ் எம்.எஸ்.எம்.இ.களுக்கு வங்கிகள் கடன் மறுக்க முடியாது என்றும், எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கப்படக்கூடாது தெரிவித்தார்.

ஜூலை 23, 2020 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் 100 சதவீத அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ .1,30,491.79 கோடியாக உள்ளது. இதில் ரூ .82,065.01 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கினால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அவற்றை சீர் செய்யும் பொருட்டு எந்தவித பிணையுமில்லாமல் அக்டோபர் மாதம் வரையில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடனுதவித் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் மறுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வங்கிகள் கடன் வழங்க மறுப்புத் தெரிவித்தால் அதுதொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும், நிதியமைச்சர் என்ற முறையில் அதற்கு தாமே தீர்வு காண முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிப்பது, கடன்களை மறுசீரமைப்பது குறித்தும், ரிசர்வ் வங்கியுடன் நிதியமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Similar News