வேப்ப மரத்தின் வேர் முதல் இலைகள் வரை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை !

Benefits of neem flowers rasam.

Update: 2021-08-07 00:00 GMT

வேப்ப மரத்தின் வேர் முதல் இலைகள் வரை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை தான். இதன் இலைகள், விதைகள் மற்றும் பூக்கள் பல ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்க மருத்துவ முறைகளிலும், நம் முன்னோர்கள் பின்பற்றிய, இன்னும் நாம் பின்பற்றி வருகிற பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்று நாம் அவற்றை மருந்தாக மட்டுமே பார்க்கிறோமே தவிர, உணவாக எடுத்துக்கொள்வதில்லை. வேம்பிற்கு புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


இது தோல் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், வயிற்றுப் புழுக்களை அகற்றவும், இரத்த சுத்திகரிப்பானாகவும், தலையில் உள்ள பேன்கள் போன்றவற்றிலிருந்து விடுபடவும் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப மரம் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் பூக்கும். அப்போது கிடைக்கும் வேப்பம்பூவை வைத்து பச்சடி, பொடி, ரசம் போன்ற பல வகையான உணவுகளை தயாரித்து சாப்பிடலாம். இந்த பூக்கள் பொதுவாக சந்தையில் எல்லாம் விற்கப்படுவதில்லை. உங்கள் வீட்டின் அருகில் மரம் இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். 


இன்று வேப்பம்பூவில் வைக்கக்கூடிய ஒரு ரசத்திற்கு இருக்கும் மவுசு ஏராளம். இந்த ரசம் பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு அன்று தயார் செய்யப்படும். வேப்பம் பூவின் சற்று கசப்பான சுவை புளியுடன் நல்ல மணமான ரசத்துக்கு ஏற்றதாக இருக்கும். எனவே உங்கள் வீட்டின் அருகில் வேப்ப மரம் கட்டாயம் இருந்தால் இன்று வேப்பம் பூவில் செய்த ரசத்தை செய்து பாருங்கள். சாதாரண பிரசவமாக இது தமிழர்களுக்கு என்றுமே விளங்குகிறது.

Input: http://www.ladiestylelife.com/10-amazing-health-benefits-of-neem-flower-32242.html

Image courtesy: wikipedia 


Tags:    

Similar News